இந்திய அளவில் பணப்புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
பண சுழற்சி வளர்ச்சி என்று அழைக்கப்படும் பணப்புழக்க விகிதம், இந்த பிப்ரவரி மாதத்தில் 3.7% ஆக பதிவாகியுள்ளது. இதுவே கடந்த வருட பிப்ரவரி மாதத்தில் 8.2% ஆக பதிவாகி இருந்தது. இந்திய அளவில் பணப்புழக்கம் குறைந்ததற்கு முக்கிய காரணமாக, 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட நடவடிக்கை சொல்லப்படுகிறது. அதிக அளவிலான ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்ட காரணத்தால், வங்கிகளின் வைப்புத் தொகை வளர்ச்சியும் 5.8% ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 11.2% ஆக இருந்தது.