இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி உள்ளது. இந்த நிலையில், ஜப்பான், அடுத்த நிலவு திட்டத்தில் களமிறங்கி உள்ளது. மூன் ஸ்னைப்பர் என பெயரிடப்பட்டுள்ள நிலவு திட்டம் பலகட்ட ஒத்திவைப்புகளுக்கு பின்பு, ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 27ஆம் தேதி ஏவப்படும் விண்கலம், 4 முதல் 6 மாதங்களுக்குள் நிலவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, மற்றொரு எக்ஸ்ரே இமேஜ் செயற்கைக்கோளை ஜப்பான் விண்ணில் செலுத்துகிறது. இது பிரபஞ்சத்தின் உருவாக்கம் குறித்து ஆராய்வதற்காக அனுப்பப்படுகிறது. வரும் திங்கட்கிழமை ஏவப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இது, மோசமான வானிலை காரணமாக ஒரு நாள் முன்னதாக ஏவப்படுகிறது. கடந்த மாதம், ஜப்பானின் புதிய வகை ராக்கெட் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, மூன் ஸ்னைப்பர் திட்டத்தில் வெற்றியை நோக்கி ஜப்பான் களமிறங்குகிறது. ஜப்பான் விண்கலத்தில் கையளவு மினி ரோவர் ஒன்றும் கொண்டு செல்லப்படுகிறது.