ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை வானில், நிலவும் வெள்ளியும் ஒன்றாக பிரகாசிக்கும் அற்புத காட்சி நிகழ்ந்தது. நிலவு மற்றும் வெள்ளி கோள் நம் பூமியிலிருந்து பார்க்கும்போது மிக நெருக்கமாகத் தோன்றும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். காலை 4:30 முதல் 5:30 மணி வரை கிழக்கு வானில் இதை காண முடித்தது. ஆனால், அமாவாசைக்கு மறு தினமான இன்று, நிலவு வெறும் 2% பிரகாசத்துடன் மட்டுமே இருந்தது. ஆனால், வெள்ளி, சிரியஸ் என்ற பிரகாசமான நட்சத்திரத்தை விட 10 மடங்கு கூடுதல் பிரகாசத்துடன் காணப்பட்டது. அமெரிக்க பகுதிகளில் சூரிய அஸ்தமனத்தின் போதும் இதை காண முடியும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பைனாகுலர்கள் உதவியுடன் இதை தெளிவாக காணலாம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.