இந்திய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், கொரோனா பொது முடக்கம் நிலவின் வெப்பநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் தெரியவந்துள்ளது. “கடந்த 2020 ஆம் ஆண்டு, நிலவின் இரவு நேர வெப்பநிலை 8 முதல் 10 கெல்வின் வரை குறைந்துள்ளது. இது பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள ஆச்சரியமான தொடர்பை வெளிப்படுத்துகிறது.” என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நாசாவின் நிலவு ஆர்பிட்டர் தரவுகளை ஆராய்ந்த இந்திய விஞ்ஞானிகள், 2020ல் பூமியில் மனித நடவடிக்கைகள் குறைந்ததால் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் குறைந்து, பூமியின் கதிர்வீச்சில் மாற்றம் ஏற்பட்டு, இதனால் நிலவின் வெப்பநிலை குறைந்ததாக கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு, பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒன்றோடொன்று எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை புரிந்து கொள்ள உதவும் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.