இங்கிலாந்தில் வன்முறையில் ஈடுபட்ட ஆயிரம் பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரில் கடந்த ஜூலை 29-ம் தேதி மூன்று சிறுமிகள் மர்ம நபர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து அந்நாட்டின் தீவிர வலதுசாரி அமைப்புகள் அங்கு குடியேறிய மக்கள் குறித்து அவதூறு கூறி வன்முறையை தூண்டி விட்டனர். இதன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக அங்கு வன்முறை ஏற்பட்டது. தற்போது இந்த கலவரத்தை போலீசார் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் இணைய வழி வாயிலாக இனவெறி கருத்துக்களை பரப்பிய மக்கள் என சுமார் ஆயிரம் பேரை இங்கிலாந்து போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் 575 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.