அட்லாண்டிக் கடற்கரை பகுதியில் இருந்து 91 அகதிகளை மொரோக்கோ கடற்படையினர் மீட்டுள்ளனர்.
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏராளமான அகதிகள் வேலைவாய்ப்பு தேடி செல்கின்றனர். அட்லாண்டிக் கடலில் ஆபத்தான படகு பயணங்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில், கேனரி தீவுகளை நோக்கி ஆப்பிரிக்காவில் இருந்து வந்து கொண்டிருந்த அகதிகள் படகை மொரோக்கோ கடற்படையினர் தடுத்து நிறுத்தி, அதிலிருந்த அகதிகளை மீட்டு உள்ளனர். அகதிகள் மொரோக்கோ காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் உணவு வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.