டெல்லியில் இருந்து விமானம் மூலம் காலை 9 மணிக்கு ராகுல் காந்தி கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
ராகுல்காந்தி 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கின் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் அவர் தொடர்ந்து எம்.பி. ஆக பொறுப்பேற்று பாராளுமன்றத்திற்கு சென்று பேசினார்.
கடந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு ராகுல் காந்தி தனது தொகுதியான வயநாட்டிற்கு இன்று செல்கிறார். இதற்கு கோவை, நீலகிரி வழியாக வயநாடு செல்லும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டு இருக்கின்றன. இதனை அடுத்து இன்று காலை ஒன்பது மணிக்கு கோவை விமான நிலையத்தை வந்தடைந்தார். இதன் பின்னாக விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கோவில் பாளையம், அன்னூர்,மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியாக ஊட்டிக்கு புறப்பட்டார்.