பாகிஸ்தானில் 3 பேருக்கு குரங்கு அம்மை

August 17, 2024

குரங்கு அம்மை பாதிப்பு பாகிஸ்தானில் மூன்று பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குரங்கு அம்மை நோய் பாதிப்பை பொது சுகாதார அவசர நிலையாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மையம் கடந்த 13 ஆம் தேதி அறிவித்தது. இந்நிலையில் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. இத்துடன் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பிய 34 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. இப்போது இதைத் தொடர்ந்து கைபர் அப்துன்கவா பகுதியைச் […]

குரங்கு அம்மை பாதிப்பு பாகிஸ்தானில் மூன்று பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை நோய் பாதிப்பை பொது சுகாதார அவசர நிலையாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மையம் கடந்த 13 ஆம் தேதி அறிவித்தது. இந்நிலையில் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. இத்துடன் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பிய 34 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது.

இப்போது இதைத் தொடர்ந்து கைபர் அப்துன்கவா பகுதியைச் சேர்ந்த மேலும் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. கடந்த ஏப்ரல் 2023-ல் பாகிஸ்தானில் பதினோரு பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதில் ஒருவர் இறந்து போனார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu