எம் ஆர் எஃப் நிகர லாபம் இரு மடங்கு உயர்வு

பிரபல டயர் தயாரிப்பு நிறுவனமான எம் ஆர் எஃப், தனது காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் இரு மடங்கு உயர்ந்து, 341 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 165 கோடி மட்டுமே லாபம் ஈட்டப்பட்டிருந்தது. அதே வேளையில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 5305 கோடியில் இருந்து 5842 கோடியாக உயர்ந்துள்ளது. அதிக அளவில் லாபம் பதிவாகியுள்ளதால், 10 […]

பிரபல டயர் தயாரிப்பு நிறுவனமான எம் ஆர் எஃப், தனது காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் இரு மடங்கு உயர்ந்து, 341 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 165 கோடி மட்டுமே லாபம் ஈட்டப்பட்டிருந்தது. அதே வேளையில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 5305 கோடியில் இருந்து 5842 கோடியாக உயர்ந்துள்ளது.

அதிக அளவில் லாபம் பதிவாகியுள்ளதால், 10 ரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தின் பங்குக்கு, 169 ரூபாய் இறுதி ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் நிர்வாகக் குழு பரிந்துரைத்துள்ளது. அதிகமான லாபம் ஈட்டப்பட்டது குறித்து எம்ஆர்எப் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: “கொரோனா பரவல் மற்றும் உக்ரைன் போர் காரணமாக, கடந்த நிதி ஆண்டில், மூலப்பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தன. ஆனால், நிதியாண்டின் பிற்பகுதியில் மூலப்பொருட்களின் விலைகள் குறைந்ததால், லாபத்திற்கு வழிவகை கிடைத்தது” என தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu