வங்கதேச இடைக்கால அரசில் தற்போது மேலும் 4 பேர் இடைக்கால அரசில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசை ராணுவம் அமைத்தது. இதில் 17 ஆலோசகர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் தற்போது மேலும் 4 பேர் இடைக்கால அரசில் சேர்க்கப்பட்டுள்ளனர். பொருளாதார வல்லுநர் வகித்தூதின் முஹ்மத், முன்னாள் அமைச்சரவை செயலாளர் அலி இமாம், லெப்டினன் ஜெனரல் ஜஹாங்கீர், முன்னாள் மின்துறை செயலாளர் முகமது கபீர் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முகமது யூனுஸ் மற்றும் 13 ஆலோசகர்கள் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி பதவியேற்றனர். ஆகஸ்ட் 11ஆம் தேதி இரண்டு பேர் பதவியேற்றனர். அதற்கு அடுத்த நாள் ஒருவர் பதவி ஏற்றார்.