இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது சொத்துக்களில் மேலும் ஒரு அதிசயத்தை சேர்த்துள்ளார். சுமார் ₹1,000 கோடி மதிப்புள்ள போயிங் 737 மேக்ஸ் 9 என்ற தனியார் ஜெட்டை அவர் வாங்கியுள்ளார். இந்தியாவில் இதுபோன்ற ஒரு தனியார் ஜெட் விமானம் வாங்கிய முதல் நபர் என்ற பெருமையை அம்பானி பெற்றுள்ளார்.
இந்த ஜெட் விமானம், பயணிகளுக்கு அதிக வசதிகளை அளிக்கும் வகையில் சுவிட்சர்லாந்தில் சிறப்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜெட்டின் பயண தூரம் 11,770 கிலோமீட்டர்கள். இதன் மூலம் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் உலகின் எந்த மூலையுக்கும் எளிதாக பயணிக்க முடியும். ஏற்கனவே அம்பானிக்கு 10 தனியார் ஜெட் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இருந்த நிலையில், இந்த புதிய ஜெட் விமானம் அவரது பயண வசதிகளை மேலும் அதிகரித்துள்ளது.