ஜியோ பிரைன் - முகேஷ் அம்பானி வெளியிட்ட செயற்கை நுண்ணறிவு அறிவிப்பு

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 47 வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில், ஜியோ பிரைன் பற்றிய அறிவிப்பை முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார். ஜியோ பிரைன் மூலம், ஜியோ மற்றும் பிற ரிலையன்ஸ் நிறுவனங்களில் ஏஐ தொழில்நுட்ப தத்தெடுப்பு அதிகரிக்க உள்ளது. ஜியோ பிரைன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, முடிவெடுத்தல், கணிப்புகள் மற்றும் வாடிக்கையாளர் புரிதலை மேம்படுத்துதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தவிர, ஜியோ ஏஐ-கிளவுட் சேவையை முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார். இது, வரும் தீபாவளி முதல், 100 […]

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 47 வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில், ஜியோ பிரைன் பற்றிய அறிவிப்பை முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார்.

ஜியோ பிரைன் மூலம், ஜியோ மற்றும் பிற ரிலையன்ஸ் நிறுவனங்களில் ஏஐ தொழில்நுட்ப தத்தெடுப்பு அதிகரிக்க உள்ளது. ஜியோ பிரைன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, முடிவெடுத்தல், கணிப்புகள் மற்றும் வாடிக்கையாளர் புரிதலை மேம்படுத்துதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தவிர, ஜியோ ஏஐ-கிளவுட் சேவையை முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார். இது, வரும் தீபாவளி முதல், 100 ஜிபி வரையிலான இலவச சேமிப்பை ஜியோ பயனாளர்களுக்கு வழங்கும். நிகழ்வில் பேசிய அம்பானி, 6ஜி, ஏஐ மற்றும் IoT போன்ற முன்னணி தொழில்நுட்பங்களில் தொடர்ந்து நடத்தப்படும் ஆராய்ச்சி மற்றும் காப்புரிமைகளை முன்னிலை படுத்தினார். மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் மற்றும் தொலைத் தொடர்புத் துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படும் என்று உறுதியளித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu