டெக்கத்லான் போன்ற விளையாட்டுத்துறை நிறுவனத்தை தொடங்க முகேஷ் அம்பானி திட்டம்

July 9, 2024

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த டெக்கத்லான் நிறுவனம் விளையாட்டு துறை சார்ந்த பொருட்கள் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் பல்வேறு கிளைகளை திறந்து விளையாட்டு துறை சார்ந்த முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிலையில், ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, டெக்கத்லான் போலவே விளையாட்டுத் துறை சார்ந்த நிறுவனம் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளார். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம், இந்தியாவின் முக்கிய நகரங்களில் 8000 முதல் 10000 சதுர அடி கொண்ட வர்த்தக பகுதிகளை குத்தகைக்கு எடுத்துள்ளதாக […]

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த டெக்கத்லான் நிறுவனம் விளையாட்டு துறை சார்ந்த பொருட்கள் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் பல்வேறு கிளைகளை திறந்து விளையாட்டு துறை சார்ந்த முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிலையில், ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, டெக்கத்லான் போலவே விளையாட்டுத் துறை சார்ந்த நிறுவனம் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம், இந்தியாவின் முக்கிய நகரங்களில் 8000 முதல் 10000 சதுர அடி கொண்ட வர்த்தக பகுதிகளை குத்தகைக்கு எடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத ரிலையன்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனத்திற்கு இந்த இடங்கள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. டெக்கத்லான் போன்ற விளையாட்டு துறை சார்ந்த நிறுவனமாக அது இருக்கும் என தகவல் வெளிவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu