எகிப்தின் தெற்கு பகுதியில் உள்ள பழமையான நகரம் ஒன்றில், கிட்டத்தட்ட 2000 செம்மறி ஆட்டு மம்மிக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அபிதோஷ் நகரத்தில் உள்ள பழமையான ராம்சேஸ் 2 ஆலயத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒசிரிஸ் என்ற கடவுளுக்கு ஏற்படுத்தப்பட்ட வழிபாட்டுத் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மம்மிக்கள், தாளமிக் காலத்தை சேர்ந்தவையாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த தளத்தில் இருந்து, செம்மறி ஆடுகள், நாய்கள், மாடுகள், கீரிப்பிள்ளைகள் ஆகியவற்றின் மம்மிக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆட்டுக்கிடாய்களின் தலைகள் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், தாளமிக் காலத்தை சேர்ந்த கலாச்சாரம் குறித்து அறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மம்மிக்கள் தவிர, இந்த தளத்தில் 5 அடி அகலம் உள்ள கட்டட அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ரோமானியர்களின் வெற்றி குறித்து அறியும் வாய்ப்புகள் ஏற்படும் என கருதப்படுகிறது.