விரைவில் நியூரோலிங் 2வது சிப் பொருத்தம் - எலான் மஸ்க் முக்கிய அறிவிப்பு

எலான் மஸ்கின் நியூரோலிங் நிறுவனத்தின் மூலம் மூளையில் சிப் பொருத்தப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. பரிசோதனை முயற்சியாக, கடந்த ஜனவரியில் முதல் நபருக்கு சிப் பொருத்தப்பட்டு வெற்றி கிடைத்துள்ளது. இந்த நிலையில், இரண்டாவது நபருக்கு சிப் பொருத்த உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். “நியூரோலிங் நிறுவனம் சார்பில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோலண்ட் என்ற நபருக்கு மூளையில் சிப் பொருத்தப்பட்டது. சிப் உதவியுடன் அவரால் கணினியை இயக்குவது உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ள முடிகிறது. இந்த நிலையில், கடந்த மே […]

எலான் மஸ்கின் நியூரோலிங் நிறுவனத்தின் மூலம் மூளையில் சிப் பொருத்தப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. பரிசோதனை முயற்சியாக, கடந்த ஜனவரியில் முதல் நபருக்கு சிப் பொருத்தப்பட்டு வெற்றி கிடைத்துள்ளது. இந்த நிலையில், இரண்டாவது நபருக்கு சிப் பொருத்த உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

“நியூரோலிங் நிறுவனம் சார்பில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோலண்ட் என்ற நபருக்கு மூளையில் சிப் பொருத்தப்பட்டது. சிப் உதவியுடன் அவரால் கணினியை இயக்குவது உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ள முடிகிறது. இந்த நிலையில், கடந்த மே மாதம் இரண்டாவது நபருக்கு சிப் பொருத்துவதற்கான அனுமதியை நியூரோலிங் பெற்றது. விரைவில் இரண்டாவது நபருக்கு பொருத்தப்படும். நியூரோலிங் வடிவமைத்துள்ள சிப் மூலம் பக்கவாதம் போன்ற வியாதிகளால் துன்பப்படும் மனிதர்கள் மிகவும் பயனடைவார்கள். எதிர்காலத்தில் மனிதர்களுக்கு வலிமை அதிகரிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu