மியான்மரில் மீண்டும் அவசரநிலை நீடிப்பு

August 1, 2024

மியான்மரில் அவசர நிலை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சி தொடர்வதற்கான அவசரநிலை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் ஜனநாயக முறையில் ஆம்சான் சூக்கி அரசு தேர்ந்தெடுக்கப்பட்டது. அதனை ராணுவம் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி கலைத்தது. அதன்பின் ஆங்கான் சூக்கி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டனர். ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் ராணுவம் அவர்களை அடக்கி ஆட்சியை கைப்பற்றியது. மீண்டும் […]

மியான்மரில் அவசர நிலை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் ராணுவ ஆட்சி தொடர்வதற்கான அவசரநிலை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் ஜனநாயக முறையில் ஆம்சான் சூக்கி அரசு தேர்ந்தெடுக்கப்பட்டது. அதனை ராணுவம் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி கலைத்தது. அதன்பின் ஆங்கான் சூக்கி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டனர். ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் ராணுவம் அவர்களை அடக்கி ஆட்சியை கைப்பற்றியது. மீண்டும் தேர்தல் நடத்தி ஜனநாயக ஆட்சியை நிறுவுவதாக ராணுவம் வாக்குறுதி அளித்தது. ஆனால் தேர்தல் நடத்துவதை தவிர்க்கும் வகையில் அவசரநிலை பிரகடனம் செய்தது. தற்போது அது காலாவதி ஆகும் சூழல் ஏற்பட்டதையடுத்து மேலும் 6 மாதங்களுக்கு அவசரநிலை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஆறாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu