மியான்மர்: ஆங் சான் சூகியின் கட்சி கலைப்பு

March 29, 2023

மியான்மர் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் கட்சி ராணுவ ஆட்சியால் தற்போது கலைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தலுக்கு முன்பதிவு செய்ய தவறியதாக காரணம் கூறப்பட்டு கட்சி கலைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ராணுவ ஆட்சிக் காலம் நீட்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மியான்மர் நாட்டில் தேர்தல் நடைபெறுவதற்கான நாட்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மேலும், அடிமைத்தனத்தை எதிர்த்து போராடும் சிறுபான்மையினர் மற்றும் பழங்குடி இன மக்கள் […]

மியான்மர் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் கட்சி ராணுவ ஆட்சியால் தற்போது கலைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தலுக்கு முன்பதிவு செய்ய தவறியதாக காரணம் கூறப்பட்டு கட்சி கலைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ராணுவ ஆட்சிக் காலம் நீட்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மியான்மர் நாட்டில் தேர்தல் நடைபெறுவதற்கான நாட்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மேலும், அடிமைத்தனத்தை எதிர்த்து போராடும் சிறுபான்மையினர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீது ராணுவம் வன்முறை தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தேதி அறிவிக்கப்படாத தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்பதிவை செய்யத் தவறியதாக, கிட்டத்தட்ட 63 கட்சிகள் அடையாளம் காணப்பட்டு, நீக்கப்பட்டுள்ளதாக மியான்மர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu