நாம் தமிழர் கட்சியின் மாற்று சின்னம் கோரிக்கை நிராகரிப்பு

March 27, 2024

பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாய சின்னத்தை ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனை அடுத்து சீமான் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவிற்கு ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும்,பாரதிய மக்கள் […]

பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.

சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாய சின்னத்தை ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனை அடுத்து சீமான் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவிற்கு ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும்,பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இதனை அடுத்து நாம் தமிழர் கட்சி சார்பில் படகு அல்லது பாய் மரப்படகு சின்னத்தை ஒதுக்குமாறு கோரப்பட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu