இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே போட்டியிட உள்ளார் என தகவல் வந்துள்ளது.
இலங்கையில் செப்டம்பர் 21ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 15-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியத் தலைவர் சஜித் பிரேமதாச, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சே, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் குமார திசாநாயக, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா போன்றோர் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
இந்நிலையில், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளராக நமல் ராஜபக்சே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் ஆவார். இவர் 2010 முதல் மூன்று முறை அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.