ஜனாதிபதி மாளிகையில் உள்ள இரு முக்கிய அரங்குகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது
டெல்லியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் உள்ள இரண்டு முக்கிய அரங்குகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தர்பார் ஹால் என்ற பெயருடைய அரங்கை கணதந்திர மண்டபம் என்றும் அசோக் ஹால் என்ற அறையை அசோக் மண்டபம் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.