நிலவில் ரயில் நிலையம் அமைக்கப் போவதாக நாசா அறிவிப்பு

நிலவில் ரயில் நிலையம் அமைக்க உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கு பயன்படும் வகையில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இது முற்றிலும் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்படும் என தெரிவித்துள்ளது. காந்த ஈர்ப்பு தொழில்நுட்பத்தில் நிலவில் ரயில் போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேக்னடிக் ரோபோக்கள் என்று அழைக்கப்படும் கருவிகள் மூலம் போக்குவரத்து நிகழ்த்தப்படும். நிலவின் மேற்பரப்பில் ட்ராக் அமைக்கப்பட்ட பிறகு, அதில் […]

நிலவில் ரயில் நிலையம் அமைக்க உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கு பயன்படும் வகையில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இது முற்றிலும் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

காந்த ஈர்ப்பு தொழில்நுட்பத்தில் நிலவில் ரயில் போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேக்னடிக் ரோபோக்கள் என்று அழைக்கப்படும் கருவிகள் மூலம் போக்குவரத்து நிகழ்த்தப்படும். நிலவின் மேற்பரப்பில் ட்ராக் அமைக்கப்பட்ட பிறகு, அதில் மிதந்த படி இவை பயணிக்கும். வினாடிக்கு 0.5 மீட்டர் வேகத்தில் இந்த ரோபோக்கள் பயணிக்கும். இதன் மூலம், நிலவில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பொருட்களை எளிமையாக கொண்டு சேர்க்கலாம். இந்த திட்டத்திற்கான பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. - இவ்வாறு நாசா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu