நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்தில், செடிகளை நிலவுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
நிலவில், சிறிய அளவிலான பசுமை இல்லத்தை அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக, வரும் 2026 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள ஆர்டெமிஸ் 3 திட்டத்தில், செடிகள் கொண்டு செல்லப்பட உள்ளன. இந்தத் திட்டத்திற்கு லீப் LEAF ("Lunar Effects on Agricultural Flora") என பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி, விண்வெளி பயிர்கள் நிலவின் சுற்றுச்சூழலை எப்படி எதிர்கொள்கின்றன என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய உள்ளனர். எதிர்காலத்தில், மனிதர்கள் நிலவில் தங்கி இருந்தால், அவர்களுக்கு தேவையான செடிகளை அங்கேயே பயிர் செய்வதற்கு இந்த ஆராய்ச்சி முக்கியமாக அமையும் என கருதப்படுகிறது.