சந்திரயான் 3 தரையிறக்கத்தில், இஸ்ரோவுக்கு நாசா, இஎஸ்ஏ உதவி

இன்று மாலை, சந்திரயான் 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் கால் பதிக்க உள்ளது. லேண்டரின் மென்மையான தரையிறக்கம் மிக முக்கிய கட்டமாகும். இந்தக் கட்டத்தில், இஸ்ரோவுக்கு அமெரிக்காவின் நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஎஸ்ஏ ஆகியவை துணை புரிய உள்ளன. சந்திரயான் 3 தனது பயணத்தை தொடங்கிய கட்டத்தில் இருந்தே, நாசா மற்றும் இ எஸ் ஏ இஸ்ரோவுக்கு உதவி வருகின்றன. குறிப்பாக, விண்கலத்தின் இருப்பிடம் குறித்த தகவல்களை வழங்குவதில் உதவி செய்து […]

இன்று மாலை, சந்திரயான் 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் கால் பதிக்க உள்ளது. லேண்டரின் மென்மையான தரையிறக்கம் மிக முக்கிய கட்டமாகும். இந்தக் கட்டத்தில், இஸ்ரோவுக்கு அமெரிக்காவின் நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஎஸ்ஏ ஆகியவை துணை புரிய உள்ளன.

சந்திரயான் 3 தனது பயணத்தை தொடங்கிய கட்டத்தில் இருந்தே, நாசா மற்றும் இ எஸ் ஏ இஸ்ரோவுக்கு உதவி வருகின்றன. குறிப்பாக, விண்கலத்தின் இருப்பிடம் குறித்த தகவல்களை வழங்குவதில் உதவி செய்து வந்தன. தற்போது, லேண்டர் தரையிறக்கம் நிகழும் தருவாயில், லேண்டருடனான தகவல் தொடர்பை ஏற்படுத்துவதில், நாசா மற்றும் இஎஸ்ஐ உதவி செய்ய உள்ளன. மேலும், விண்கலத்தின் விண்வெளி பயணத்தை கண்காணிப்பதற்காக, இஸ்ரோ, கர்நாடக கிராமம் ஒன்றில் டெலிமெட்ரி நிலையம் அமைத்துள்ளது. அங்கிருந்து, சந்திரயான் 3 விண்வெளி பயணம் கண்காணிக்கப்படுகிறது. எனவே, இஸ்ரோ, நாசா, இ எஸ் ஏ ஆகியவை ஒன்றிணைந்து சந்திரயான் 3 திட்டத்தில் பணியாற்றுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu