நாசா மேற்கொண்ட மோதலுக்கு பிறகு தர்பூசணி போல உருமாறிய விண்கல்

கடந்த 2002 செப்டம்பரில், விண்கல்லின் சுற்றுவட்ட பாதையை திசை திருப்பும் டார்ட் திட்டத்தை நாசா செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் படி, டைமார்போஸ் என்ற விண்கல் மீது நாசாவின் கலம் மோதல் செய்யப்பட்டது. இதன் விளைவாக, விண்கல்லின் சுற்றுவட்ட பாதையில் மாற்றம் நிகழ்ந்து, திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த விண்கல்லை தொடர்ந்து ஆய்வு செய்து வந்ததில், விண்கல்லின் வடிவமும் மாற்றம் பெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. வட்டமாக இருந்த விண்கல்லின் தோற்றம் நீள்வட்ட வடிவிலான தர்பூசணி பழத்தைப் போல […]

கடந்த 2002 செப்டம்பரில், விண்கல்லின் சுற்றுவட்ட பாதையை திசை திருப்பும் டார்ட் திட்டத்தை நாசா செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் படி, டைமார்போஸ் என்ற விண்கல் மீது நாசாவின் கலம் மோதல் செய்யப்பட்டது. இதன் விளைவாக, விண்கல்லின் சுற்றுவட்ட பாதையில் மாற்றம் நிகழ்ந்து, திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த விண்கல்லை தொடர்ந்து ஆய்வு செய்து வந்ததில், விண்கல்லின் வடிவமும் மாற்றம் பெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. வட்டமாக இருந்த விண்கல்லின் தோற்றம் நீள்வட்ட வடிவிலான தர்பூசணி பழத்தைப் போல மாற்றம் அடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாசாவில் பணியாற்றும் பொறியாளர் சாந்தனு நாயுடு, டார்ட் திட்டத்தினால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து பேசி உள்ளார். அப்போது, டைமார்போஸ் விண்கல் தனது ஒற்றை சுற்றுவட்ட பாதையை நிறைவு செய்வதற்கு, முன்பிருந்ததை விட 33 நிமிடங்கள் 15 நொடிகள் குறைவாக எடுத்துக் கொள்வதாக கூறியுள்ளார். இதன் மூலம், எதிர்காலத்தில் பூமியை நோக்கி வரும் விண்கல்லின் சுற்றுவட்ட பாதை தொலைவு, நேரம் மட்டுமல்லாது அதன் வடிவத்தை கூட மாற்ற முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu