ஒரு சுயாதீன ஹேக்கர், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் கணினி அமைப்பில் இரண்டாவது முறையாக பாதுகாப்பு குறைபாட்டைக் கண்டறிந்துள்ளார். இந்த குறைபாடுகளை நாசா நிர்வாகத்திடம் தெரிவித்ததற்காக, நாசாவின் தலைமை தகவல் அதிகாரி மார்க் விட், அந்த ஹேக்கருக்கு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த ஹேக்கர், தனது சாதனையை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். பலர் இவரது செயலை பாராட்டியுள்ளனர். சிலர் இது குறித்து நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர். நாசா நிர்வாகம், தனது அமைப்பில் பாதுகாப்பு குறைபாட்டைக் கண்டறிந்த ஹேக்கர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அவரது செயலை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.