செவ்வாய் கிரகத்தின் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட நாசாவின் இன்சைட் லேண்டரின் ஆயுட்காலம் நிறைவு

November 2, 2022

செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வுக்காக, 4 வருடங்களுக்கு முன்னர், இன்சைட் லேண்டர் என்ற விண்கலத்தை நாசா அனுப்பியிருந்தது. தொடர்ந்து 4 வருடங்கள் செயலில் இருந்த இந்தக் கலம், தற்போது, எரிசக்தி உற்பத்தி திறனை இழந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட தூசி புயல்களினால், இந்த கலத்தின் சூரிய மின் தகடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சூரிய மின் தகடுகளில் அதிகமான தூசி படிந்துள்ளது. இதனால், இந்த கலம் செயல்படுவதற்கு தேவைப்படும் எரிசக்தி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இயன்றவரை இந்த கலத்தை இயக்குவது […]

செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வுக்காக, 4 வருடங்களுக்கு முன்னர், இன்சைட் லேண்டர் என்ற விண்கலத்தை நாசா அனுப்பியிருந்தது. தொடர்ந்து 4 வருடங்கள் செயலில் இருந்த இந்தக் கலம், தற்போது, எரிசக்தி உற்பத்தி திறனை இழந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட தூசி புயல்களினால், இந்த கலத்தின் சூரிய மின் தகடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சூரிய மின் தகடுகளில் அதிகமான தூசி படிந்துள்ளது. இதனால், இந்த கலம் செயல்படுவதற்கு தேவைப்படும் எரிசக்தி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இயன்றவரை இந்த கலத்தை இயக்குவது குறித்து நாசா தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த கலம், செவ்வாய் கிரகம் குறித்த ஏராளமான தகவல்களை சேகரித்து வைத்துள்ளது. பலவற்றை பூமிக்கு அனுப்பியுள்ளது. குறிப்பாக, செவ்வாய் கிரகத்தின் உட்புற படிமங்கள், அதன் திரவ மையப்பகுதி, மேற்பரப்பிற்கு அடியில் இருக்கும் காந்தப்புலம், செவ்வாய் கிரகத்தில் உள்ள சுற்றுச்சூழல், அங்கு ஏற்படும் நிலநடுக்கங்கள் போன்றவை குறித்து அநேக தரவுகளை இந்த கலம் சேமித்துள்ளது. அதனை பூமிக்கு அனுப்புவது தற்போது முதன்மையாக கருதப்படுகிறது. அதை நோக்கி நாசா பணி செய்து வருகிறது.

இது குறித்து பேசிய நாசா விஞ்ஞானி புரூஸ் பேனர்ட், “இன்சைட் லேண்டர் அனுப்பி உள்ள தகவல்களின் அடிப்படையில், செவ்வாய் கிரகம் உயிரோட்டம் உள்ள கிரகம் ஆகும். கிடைத்துள்ள தகவல்களை வைத்து தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இன்சைட் லேண்டர் தற்போது அதன் இயக்கத்திற்கு தேவைப்படும் மின் உற்பத்தியில் 20 சதவீதத்திற்கும் குறைவான அளவே உற்பத்தி செய்கிறது. எனவே, அதனை முழுமையாக இயக்குவது சாத்தியமற்று உள்ளது. தகவல் சேகரிப்புக்காக குறிப்பிட்ட சில பாகங்களை மட்டும் இயக்கி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் ஆய்வு விண்கலத்துடன் இந்த இன்சைட் லேண்டர் தொடர்பில் உள்ளது. எப்போது, இந்த விண்கலத்துடனான 2 தகவல் இணைப்புகளை தொடர்ந்து இது தவறவிடுகிறதோ, அப்போது இது முழுமையாக செயல் இழந்ததாக கொள்ளப்படும். ஒருவேளை வேகமான காற்று அடித்தால், அதன் மின்தகடுகளில் உள்ள தூசி படலங்கள் அகற்றப்படலாம். அப்போது இது தகவல் இணைப்பிற்காக தொடர்பு கொள்ளும் நிலை ஏற்படும். ஆனால், அது நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிகக் குறைவு” என்று நாசா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu