இன்ஸ்டாகிராம் வழியாக பிரபஞ்சத்தை காண புதிய பில்டர் - நாசா அறிமுகம்

இன்ஸ்டாகிராம் தளத்தில் நாசா பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. பிரபஞ்சத்தின் பல்வேறு ஆச்சரியங்கள் நிறைந்த புகைப்படங்கள் உலக அளவில் கவனம் பெற்று வருகின்றன. அந்த வகையில், இன்ஸ்டாகிராம் தளத்தில் புதிய பில்டர் அம்சம் ஒன்றை நாசா அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் மூலம், பயனர்களுக்கு புதுவித புகைப்பட அனுபவம் கிடைக்கும். இன்ஸ்டாகிராம் எக்ஸ்பீரியன்ஸ் என்ற பெயரில் புதிய ஆக்மென்டெட் ரியாலிட்டி பில்டர் ஒன்றை நாசா அறிமுகம் செய்துள்ளது. இந்த பில்டர் வழியாக பார்த்தால், சந்திரா எக்ஸ்ரே ஆய்வகம் […]

இன்ஸ்டாகிராம் தளத்தில் நாசா பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. பிரபஞ்சத்தின் பல்வேறு ஆச்சரியங்கள் நிறைந்த புகைப்படங்கள் உலக அளவில் கவனம் பெற்று வருகின்றன. அந்த வகையில், இன்ஸ்டாகிராம் தளத்தில் புதிய பில்டர் அம்சம் ஒன்றை நாசா அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் மூலம், பயனர்களுக்கு புதுவித புகைப்பட அனுபவம் கிடைக்கும்.

இன்ஸ்டாகிராம் எக்ஸ்பீரியன்ஸ் என்ற பெயரில் புதிய ஆக்மென்டெட் ரியாலிட்டி பில்டர் ஒன்றை நாசா அறிமுகம் செய்துள்ளது. இந்த பில்டர் வழியாக பார்த்தால், சந்திரா எக்ஸ்ரே ஆய்வகம் மற்றும் இதர விண்வெளி தொலைநோக்கிகளின் வழியாக பிரபஞ்சத்தை பார்ப்பது போன்ற உணர்வு கிடைக்கும். பயனர்களுக்கு புதுவித கண்ணோட்டத்தில் பிரபஞ்சத்தை காணும் வாய்ப்பு கிடைக்கும். இன்ஸ்டாகிராம் தளத்தில், ‘இன்ஸ்டாகிராம் சந்திரா எக்ஸ்பீரியன்ஸ்’ என்று தேடினால் இந்த பில்டர் அம்சத்தை பெற முடியும். சந்திராவின் 25 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த அம்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu