நாசாவின் விண்கல் தேடல் கலம் ஜூலை மாதத்துடன் ஓய்வு

Near-Earth Object Wide-field Infrared Survey Explorer - Neowise என்ற விண்கல் தேடல் திட்டத்தை நாசா கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்த திட்டம் வரும் ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூரிய நடவடிக்கைகளின் 11 ஆண்டுகால உச்சகட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக, அதிகமான சூரிய புயல்கள் பூமியை தாக்குகிறது. எனவே, பூமியின் வளிமண்டலம் வெப்பமாகி விரிவடைகிறது. இதனால் பூமியை சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் பாதிப்படைகிறது. சில […]

Near-Earth Object Wide-field Infrared Survey Explorer - Neowise என்ற விண்கல் தேடல் திட்டத்தை நாசா கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்த திட்டம் வரும் ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய நடவடிக்கைகளின் 11 ஆண்டுகால உச்சகட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக, அதிகமான சூரிய புயல்கள் பூமியை தாக்குகிறது. எனவே, பூமியின் வளிமண்டலம் வெப்பமாகி விரிவடைகிறது. இதனால் பூமியை சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் பாதிப்படைகிறது. சில செயற்கைக்கோள்களின் சுற்றுவட்ட பாதைகள் நீட்டிக்கப்படுகிறது. ஆனால், Neowise திட்டத்திற்கு தனியான ப்ரொபல்ஷன் அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை என்பதால், இதனை சுற்றுவட்ட பாதையில் தொடர்ந்து செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விண்கலம் ஜூலை 31 ஆம் தேதியன்று இறுதி செயல்பாட்டுடன் இருக்கும். அதன் பிறகு ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் ஓய்வு பெற்று உறக்க நிலைக்கு அனுப்பப்படும். படிப்படியாக பூமியை நோக்கி நகர்ந்து வந்து 2024 ஆம் இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பூமியில் விழும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu