சூரியனின் பிளாஸ்மாவை மிக அருகாமையில் புகைப்படம் எடுத்து நாசாவின் பார்க்கர் விண்கலம் சாதனை

September 20, 2023

சூரியனை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய பார்க்கர் விண்கலம், புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதிசக்தி வாய்ந்த சூரிய வெடிப்பை எதிர்கொண்ட முதல் விண்கலமாக இது வரலாறு படைத்துள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட விண்கலம் ஒன்று, அதிசக்தி வாய்ந்த சூரிய வெடிப்பை எதிர்கொள்வது இதுவே முதல் முறையாகும். அது தவிர, சூரியனின் பிளாஸ்மாவை மிகவும் அருகாமையில் சென்று புகைப்படம் எடுத்த விண்கலமாக இது அறியப்படுகிறது.நாசாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், பார்க்கர் விண்கலம் சூரியனுக்கு அருகாமையில் சென்று பதிவு செய்த காட்சி […]

சூரியனை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய பார்க்கர் விண்கலம், புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதிசக்தி வாய்ந்த சூரிய வெடிப்பை எதிர்கொண்ட முதல் விண்கலமாக இது வரலாறு படைத்துள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட விண்கலம் ஒன்று, அதிசக்தி வாய்ந்த சூரிய வெடிப்பை எதிர்கொள்வது இதுவே முதல் முறையாகும். அது தவிர, சூரியனின் பிளாஸ்மாவை மிகவும் அருகாமையில் சென்று புகைப்படம் எடுத்த விண்கலமாக இது அறியப்படுகிறது.நாசாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், பார்க்கர் விண்கலம் சூரியனுக்கு அருகாமையில் சென்று பதிவு செய்த காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த விண்கலம் அனுப்பியுள்ள தரவுகள் மூலம், சூரியன் குறித்த ஆராய்ச்சிகள் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக, சூரியனின் மேற்பரப்பில் உள்ள பிளாஸ்மா குறித்த ஆராய்ச்சிகளில் முக்கிய முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரியனின் பிளாஸ்மா பரப்பிலிருந்து சூரிய வெடிப்புகள் தோன்றும் நிகழ்வுகளை விஞ்ஞானிகள் அறிய முடியும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu