புளோரிடா வீட்டில் விழுந்தது விண்வெளி குப்பை தான் - உறுதி செய்த நாசா

கடந்த மாதம் புளோரிடாவில் உள்ள ஒரு வீட்டில், கூரையைப் பிய்த்துக் கொண்டு அதிக வேகத்துடன் பொருள் ஒன்று விழுந்தது. இது விண்வெளி குப்பையாக இருக்கலாம் என கருதப்பட்டது. இது தொடர்பாக விசாரணை செய்து வந்த நாசா, அது விண்வெளி குப்பை தான் என உறுதி செய்துள்ளது. கடந்த மார்ச் 8ம் தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்த உபகரண பாகம் ஒன்று புளோரிடா வீட்டுக் கூரையில் விழுந்துள்ளது. சிலிண்டர் வடிவிலான இந்த பொருள் பற்றி கென்னடி […]

கடந்த மாதம் புளோரிடாவில் உள்ள ஒரு வீட்டில், கூரையைப் பிய்த்துக் கொண்டு அதிக வேகத்துடன் பொருள் ஒன்று விழுந்தது. இது விண்வெளி குப்பையாக இருக்கலாம் என கருதப்பட்டது. இது தொடர்பாக விசாரணை செய்து வந்த நாசா, அது விண்வெளி குப்பை தான் என உறுதி செய்துள்ளது.

கடந்த மார்ச் 8ம் தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்த உபகரண பாகம் ஒன்று புளோரிடா வீட்டுக் கூரையில் விழுந்துள்ளது. சிலிண்டர் வடிவிலான இந்த பொருள் பற்றி கென்னடி விண்வெளி மையத்தில் ஆய்வு செய்யப்பட்டு வந்தது. அப்போது, குறிப்பிட்ட அந்த பாகம் 2021 ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து சென்றது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும் போது இது முழுமையாக எரிந்து விடும் என சொல்லப்பட்டது. ஆனால், வளிமண்டல விளைவுகளில் இருந்து தப்பி, அந்த பாகம் புளோரிடாவில் விழுந்துள்ளது என்று நாசா கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu