கடந்த மாதம், பூமியிலிருந்து 6500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரம் ஒன்று வெளியிடும் ஒலிகளை நாசா பதிவு செய்து சாதனை புரிந்தது. தற்போது, சூரியனிலிருந்து வெளியாகும் ஒலியை குறித்து பகிர்ந்துள்ளது. சூரியனின் ஒலி, உலகில் உள்ள அனைவரையும் செவிடாக்கும் வகையில் அதிக சத்தமுடன் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
மைக்கேல்சன் டாப்ளர் இமேஜர் என்ற கருவி மூலம், சூரியனின் ஒலியை நாசா பதிவு செய்துள்ளது. அதனை யூடியூப்பில் வெளியிட்டுள்ள நாசா, “சூரியனை ஆய்வு செய்து வரும் SOHO மூலம் 40 நாட்களில் இந்த ஒலி பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டு, ஒலி வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3mHz அளவிற்கு ஒலி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சூரியனிலிருந்து வெளியாகும் ஒலி, பூமியை அடையும் பொழுது கிட்டத்தட்ட 100 டெசிபல் அளவை கொண்டுள்ளது. எனவே, சூரியனுக்கு நெருக்கமாக இருக்கும் பொழுது, இந்த ஒலியானது, காதுகளை உடனடியாக செவிடாக்கும் அளவு சக்தி வாய்ந்தது” என்று பதிவிட்டுள்ளது.