சூரியனிலிருந்து வெளிவந்த சக்தி வாய்ந்த அனல் கதிர்களை நாசா புகைப்படம் எடுத்துள்ளது. கடந்த ஜூன் 20ம் தேதி, சர்வதேச நேரப்படி மதியம் 1:09 மணி அளவில், சூரியனிலிருந்து மிகவும் சக்தி வாய்ந்த கதிர்கள் வெளிப்பட்டன. இவை X ரகத்தை சேர்ந்த சூரிய கதிர்கள் என்று நாசா தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த 2003 ஆம் ஆண்டு, X 28 ரக சூரிய கதிர்களை நாசா பதிவு செய்திருந்தது. இது, அப்போதைய நிலையில் உலகெங்கும் உள்ள மின்னணு சாதனங்களை சேதப்படுத்தியது. எனவே, தற்போது பதிவு செய்யப்பட்டு இருக்கும் சூரிய கதிர்களும் அதிசக்தி வாய்ந்தவையாக, மிகுந்த சேதம் விளைவிக்க கூடியவையாக சொல்லப்பட்டுள்ளது.
சூரியனிலிருந்து வெளிப்படும் சக்தி வாய்ந்த அனல் கதிர்கள், மின்னணு சாதனங்கள், தொலைதொடர்பு சாதனங்கள், மின்சார பரிமாற்ற கம்பிகள், விண்கலங்கள், விண்வெளியில் உள்ள வீரர்கள், செயற்கைக்கோள்கள் ஆகியவற்றுக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்க கூடியவை. அந்த வகையில் நாசா எடுத்துள்ள புகைப்படம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.