வெடித்துச் சிதறிய நட்சத்திரத்தின் புகைப்படம் - ஜேம்ஸ் வெப் வெளியீடு

December 12, 2023

வெடித்துச் சிதறிய நட்சத்திரம் ஒன்றின் தெளிவான புகைப்படத்தை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எடுத்து அனுப்பியுள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் இன்ஃப்ரா ரெட் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், விண்வெளியில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகளின் தெளிவான புகைப்படங்கள் கிடைக்கின்றன. அந்த வகையில், 36 வருடங்களுக்கு முன்பு வெடித்துச் சிதறிய நட்சத்திரத்தின் எச்சங்கள் இந்த கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, விண்வெளி குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு புது வெளிச்சம் பாய்ச்சி உள்ளது. குறிப்பாக, நட்சத்திரம் வெடித்து சிதறிய பிறகு […]

வெடித்துச் சிதறிய நட்சத்திரம் ஒன்றின் தெளிவான புகைப்படத்தை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எடுத்து அனுப்பியுள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் இன்ஃப்ரா ரெட் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், விண்வெளியில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகளின் தெளிவான புகைப்படங்கள் கிடைக்கின்றன. அந்த வகையில், 36 வருடங்களுக்கு முன்பு வெடித்துச் சிதறிய நட்சத்திரத்தின் எச்சங்கள் இந்த கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, விண்வெளி குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு புது வெளிச்சம் பாய்ச்சி உள்ளது. குறிப்பாக, நட்சத்திரம் வெடித்து சிதறிய பிறகு ஏற்பட்டுள்ள தூசி படலங்கள் மற்றும் வாயு படலங்கள் புகைப்படம், பல்வேறு கேள்விகளுக்கு விடை தருவதாக அமையும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஜேம்ஸ் வெப் எடுத்த புகைப்படங்களை நாசா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu