விக்ரம் லேண்டரை தொடர்பு கொண்ட நாசாவின் லூனார் ஆர்பிட்டர்

January 19, 2024

சந்திரயான் 3 திட்டத்தில், நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறக்கப்பட்ட விக்ரம் லேண்டர் உடன், நாசாவின் லூனார் ஆர்பிட்டர் தொடர்பு கொண்டுள்ளது. முதல் முயற்சியாக, நாசாவின் லூனார் ஆர்பிட்டரில் இருந்து லேசர் ஒளி வெளியேற்றப்பட்டு, விக்ரம் லேண்டரில் உள்ள லேசர் ரிஃப்லெக்டார் கருவி மூலம் மீண்டும் ஆர்பிட்டருக்கு லேசர் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம், நிலவின் மேற்பரப்பில் உள்ள இலக்குகளை துல்லியமாக குறிப்பதற்கு புதிய வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 12ஆம் தேதி இந்த பரிமாற்றம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

சந்திரயான் 3 திட்டத்தில், நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறக்கப்பட்ட விக்ரம் லேண்டர் உடன், நாசாவின் லூனார் ஆர்பிட்டர் தொடர்பு கொண்டுள்ளது.

முதல் முயற்சியாக, நாசாவின் லூனார் ஆர்பிட்டரில் இருந்து லேசர் ஒளி வெளியேற்றப்பட்டு, விக்ரம் லேண்டரில் உள்ள லேசர் ரிஃப்லெக்டார் கருவி மூலம் மீண்டும் ஆர்பிட்டருக்கு லேசர் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம், நிலவின் மேற்பரப்பில் உள்ள இலக்குகளை துல்லியமாக குறிப்பதற்கு புதிய வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 12ஆம் தேதி இந்த பரிமாற்றம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில், ஆர்பிட்டரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் இருந்தது குறிப்பிடத்தக்கது. விக்ரம் லேண்டர் இந்த வகையில் துணையாக இருப்பது குறித்து இஸ்ரோ மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu