ப்ளுட்டோவில் இதய வடிவ பனிப்பாறை - நாசா புகைப்படம் பகிர்வு

நாசா, அவ்வப்போது விண்வெளி சார்ந்த ஆச்சரிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை அன்று புளூட்டோ கிரகத்தின் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாசா வெளியிட்டது. அதில், ப்ளூட்டோவின் மேற்பரப்பில் இதய வடிவ பனிப்பாறை தெளிவாக காட்சியளிக்கிறது. Tombaugh Regio என்று அழைக்கப்படும் இந்த பகுதியில், நைட்ரஜன் மற்றும் மீத்தேன் ஆகியவை அதிகமாக காணப்படுவதாக நாசா கூறியுள்ளது. நாசாவின் நியூ ஹரிசான்ஸ் விண்கலம், இந்த இதய வடிவ பனிப்பாறையை புகைப்படம் எடுத்துள்ளதாக நாசா கூறியுள்ளது. […]

நாசா, அவ்வப்போது விண்வெளி சார்ந்த ஆச்சரிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை அன்று புளூட்டோ கிரகத்தின் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாசா வெளியிட்டது. அதில், ப்ளூட்டோவின் மேற்பரப்பில் இதய வடிவ பனிப்பாறை தெளிவாக காட்சியளிக்கிறது. Tombaugh Regio என்று அழைக்கப்படும் இந்த பகுதியில், நைட்ரஜன் மற்றும் மீத்தேன் ஆகியவை அதிகமாக காணப்படுவதாக நாசா கூறியுள்ளது.

நாசாவின் நியூ ஹரிசான்ஸ் விண்கலம், இந்த இதய வடிவ பனிப்பாறையை புகைப்படம் எடுத்துள்ளதாக நாசா கூறியுள்ளது. மேலும், ப்ளுடோவில், பெரும்பாலும் மீத்தேன் மற்றும் நைட்ரஜனால் ஆன பனி சூழ்ந்த மலைகள், பள்ளத்தாக்குகள், சமதளங்கள், மேடு பள்ளங்கள் அனைத்தும் காணப்படுவதாக கூறியுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu