நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தில் அமைந்துள்ள ஜெஸெரோ கிரேட்டர் பகுதியில் வித்தியாசமான பாறையைக் கண்டுபிடித்துள்ளது. இந்த பாறைக்கு "Freya Castle" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாறை, வரிக்குதிரையை போல கருப்பு மற்றும் வெள்ளை கோடுகள் கொண்டுள்ளது. இதுவரை செவ்வாயில் காணப்படாத அமைப்பை இந்த பாறை கொண்டுள்ளது. எரியூட்டல் மற்றும் உருமாற்ற செயல்முறைகள் மூலம் இந்த பாறை உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
செவ்வாய் கிரகத்தின் பண்டைய வரலாறு மற்றும் வாழ்க்கைக்கான அறிகுறிகள் பற்றிய தடயங்களை பெர்செவரன்ஸ் ரோவர் தேடி வருகிறது. இந்த நிலையில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள வரிப்பாறை செவ்வாய் கிரகத்தின் புவியியல் வரலாறு பற்றி மேலும் தெரிந்து கொள்ள உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.