நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் கூட்டணியின் க்ரூ 7 திட்டம் ஒத்திவைப்பு

அமெரிக்க விண்வெளி மையமான நாசா மற்றும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து, கூட்டணியாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தில் இரு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றி வருகின்றன. அதன்படி, இன்று க்ரூ 7 திட்டத்தில் விண்வெளி வீரர்கள் அனுப்பப்படுவதாக இருந்தது. ஆனால், இந்த திட்டம் 24 மணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் காணப்படும் கோளாறுகளை முழுவதுமாக சரி செய்ய, ஒரு […]

அமெரிக்க விண்வெளி மையமான நாசா மற்றும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து, கூட்டணியாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தில் இரு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றி வருகின்றன. அதன்படி, இன்று க்ரூ 7 திட்டத்தில் விண்வெளி வீரர்கள் அனுப்பப்படுவதாக இருந்தது. ஆனால், இந்த திட்டம் 24 மணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் காணப்படும் கோளாறுகளை முழுவதுமாக சரி செய்ய, ஒரு நாள் கேடு அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்காகவே, திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.க்ரூ 7 திட்டம் ஏற்கனவே பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், இன்று செயல்படுத்தப்படுவதாக இருந்தது. தற்போது, அமெரிக்க நேரப்படி, ஆகஸ்ட் 26 அதிகாலை 3:27 மணிக்கு திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாசாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. க்ரூ 7 திட்டத்தில், நாசா விஞ்ஞானி, ஜப்பான் விண்வெளி வீரர் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் ஆகியோர் பயணப்பட உள்ளனர். அவர்கள், அடுத்த 6 மாத காலத்திற்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து ஆய்வுப் பணி மேற்கொள்ள உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu