17 ஆண்டுகள் கழித்து பூமியை நெருங்கும் நாசாவின் ஸ்டீரியோ ஏ விண்கலம்

நாசாவால் விண்வெளியில் செலுத்தப்பட்ட ஸ்டீரியோ ஏ விண்கலம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை நெருங்க உள்ளது. கடந்த 2006 அக்டோபர் 25 அன்று, ஸ்டீரியோ விண்கலங்களை நாசா செலுத்தியது. சூரியனைக் குறித்து ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட இவை, சூரியனைச் சுற்றி சுற்றுவட்ட பாதையில் வலம் வருகின்றன. நாசாவால் ஸ்டீரியோ ஏ மற்றும் ஸ்டீரியோ பி என்ற 2 விண்கலங்கள் செலுத்தப்பட்டன. இவை சூரியன் குறித்த பல்வேறு தகவல்களை அனுப்பி உள்ளன. குறிப்பாக, சூரியனின் முப்பரிமாண புகைப்படம் மற்றும் […]

நாசாவால் விண்வெளியில் செலுத்தப்பட்ட ஸ்டீரியோ ஏ விண்கலம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை நெருங்க உள்ளது.

கடந்த 2006 அக்டோபர் 25 அன்று, ஸ்டீரியோ விண்கலங்களை நாசா செலுத்தியது. சூரியனைக் குறித்து ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட இவை, சூரியனைச் சுற்றி சுற்றுவட்ட பாதையில் வலம் வருகின்றன. நாசாவால் ஸ்டீரியோ ஏ மற்றும் ஸ்டீரியோ பி என்ற 2 விண்கலங்கள் செலுத்தப்பட்டன. இவை சூரியன் குறித்த பல்வேறு தகவல்களை அனுப்பி உள்ளன. குறிப்பாக, சூரியனின் முப்பரிமாண புகைப்படம் மற்றும் தகவல்கள் இவை மூலமாக சேகரிக்கப்பட்டன. ஆனால், தற்போது, ஸ்டீரியோ பி உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஸ்டீரியோ ஏ பூமிக்கு நெருக்கமாக வர உள்ளதால், நாசா விஞ்ஞானிகள் அதனை மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளும்படி மேம்படுத்த திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, 2025 ஆம் ஆண்டு, சூரியனின் செயல்பாடுகளில் உச்ச நிலை எட்டப்படும் என கருதப்படுவதால், ஸ்டீரியோ ஏ நெருக்கம் விஞ்ஞானிகள் பார்வையில் முக்கியமாக கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu