கிரகணம் நிகழும் போது நிலவின் நிழலை நோக்கி சவுண்டிங் ராக்கெட் அனுப்ப நாசா திட்டம்

வரும் ஏப்ரல் 8ம் தேதி, நிகழாண்டின் முதல் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இது முழு சூரிய கிரகணமாக சொல்லப்பட்டுள்ளது. சூரிய கிரகணம் குறித்து ஆய்வுகள் நடத்தி வரும் நாசா, இந்த கிரகணத்தின் போது முக்கிய ஆய்வு ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, கிரகணம் நிகழும் சமயத்தில், நேரடியாக நிலவின் நிழல் பகுதியை நோக்கி சவுண்டிங் ராக்கெட்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. நாசாவின் இந்த திட்டத்தின் மூலம், கிரகணம் ஏற்படும் சமயத்தில் பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கூடுதல் […]

வரும் ஏப்ரல் 8ம் தேதி, நிகழாண்டின் முதல் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இது முழு சூரிய கிரகணமாக சொல்லப்பட்டுள்ளது. சூரிய கிரகணம் குறித்து ஆய்வுகள் நடத்தி வரும் நாசா, இந்த கிரகணத்தின் போது முக்கிய ஆய்வு ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, கிரகணம் நிகழும் சமயத்தில், நேரடியாக நிலவின் நிழல் பகுதியை நோக்கி சவுண்டிங் ராக்கெட்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

நாசாவின் இந்த திட்டத்தின் மூலம், கிரகணம் ஏற்படும் சமயத்தில் பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கூடுதல் தகவல்கள் கிடைக்கும். வளிமண்டல மேல் அடுக்கில் நிகழும் அயனி மயமாக்கல் குறித்து நாசாவின் திட்டத்தில் ஆய்வு நடத்தப்படும். நிலவின் நிழல் பூமியில் விழும் பொழுது, வளிமண்டலத்தில் அலை அலையான அயனி மாற்றம் நிகழும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். குளத்தில் கல் எறிந்தால் ஏற்படுவது போல இது இருக்கும் என தெரிவித்துள்ளனர். நாசாவின் திட்டத்தின் மூலம் இது பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu