மக்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதில் கேரளாவிற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறப்பான சேவையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ஆரோக்கிய மந்தன் விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. அதாவது ஏராளமானருக்கு இலவச சிகிச்சையில் முன்னுரிமை அளிப்பதன் காரணமாக இந்த விருது வழங்கப்படும். இந்த ஆண்டு இதற்கான விருதை கேரள மாநிலம் பெற்றுள்ளது.
இது கேரள மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருக்கும் காருண்யா ஆரோக்கிய சுரக்ஷா திட்டத்தின் மூலமாக கிடைத்திருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் அங்குள்ள மக்கள் அனைவரும் இலவச மருத்துவ சேவையை பெற முடியும். அதன்படி இந்த இரண்டு ஆண்டுகளில் 1200 கோடி அளவிலான இலவச சிகிச்சைகள் 13 லட்சம் பேருக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி கூறும் பொழுது மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை. நிதி நெருக்கடிகள் இருந்த போதிலும் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளை எடுத்துள்ளது இந்த விருதுக்கு காரணம் எனக் கூறியுள்ளார்