நீரஜ் சோப்ரா டயமண்ட் லீக் இறுதியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
முன்னணி தடகள வீரர்கள் பங்கேற்ற டயமண்ட் லீக் சாம்பியன்ஷிப், 14 சுற்றுகளாக உலகம் முழுவதும் நடந்தது. இறுதிச்சுற்று, பெல்ஜியத்தின் பிரஸ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்தியாவின் அவினாஷ் சாப்லே 9வது இடத்தில் உள்ளார். இதற்கிடையில், ஈட்டி எறிதலில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 87.86 மீட்டர் தூரத்தை எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். 90 மீட்டர் இலக்கை அவர் கடக்க முடியவில்லை. கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் தங்கம் வென்றுள்ளார்.