நீட் தேர்வு தேதி வெளியீடு

September 19, 2023

நீட் தேர்விற்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தகுதி தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. +2 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடமாக நீட் தேர்வு தாமதமாக நடைபெற்று வருவதால் 2024 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு மே மாதம் 5ம் தேதி நடத்தப்படும் […]

நீட் தேர்விற்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தகுதி தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. +2 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடமாக நீட் தேர்வு தாமதமாக நடைபெற்று வருவதால் 2024 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு மே மாதம் 5ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் முகமை அறிவித்துள்ளது.அதேபோன்று தொழில்நுட்ப கல்லூரியில் சேர்வதற்கான JEE முதல் தேர்வு ஜனவரி 24 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் தேர்வு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெறும் என தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த வருடம் மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு நாடு முழுவதும் 18 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் தமிழகத்தில் 1 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu