இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 2023-24ம் கல்வியாண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே 7ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, http://Neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 […]

இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2023-24ம் கல்வியாண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே 7ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, http://Neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வெளியே உள்ள 14 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள 499 நகரங்களில் உள்ள வெவ்வேறு மையங்களில் மே 7 மதியம் 02:00 மணி முதல் மாலை 05:20 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu