நீட் தேர்வு முறைகேடு: தேசிய தேர்வு முகமையின் தலைவர் மாற்றம்

நாடு முழுவதும் மே ஐந்தாம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நீட் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனை தேசிய தேர்வு முகமை ஆணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு நீட் தேர்வு மே ஐந்தாம் தேதி நடைபெற்றது. இதில் 24 லட்சம் பேர் தேர்வு எழுதினார். இதன் முடிவுகள் தற்போது வெளியாகிய நிலையில் இதில் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகவும், வினாத்தாள்கள் […]

நாடு முழுவதும் மே ஐந்தாம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நீட் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனை தேசிய தேர்வு முகமை ஆணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு நீட் தேர்வு மே ஐந்தாம் தேதி நடைபெற்றது. இதில் 24 லட்சம் பேர் தேர்வு எழுதினார். இதன் முடிவுகள் தற்போது வெளியாகிய நிலையில் இதில் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகவும், வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் ஆன்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை மாணவர்கள் முன்வைத்தனர். இதனால் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வு குளறுகுடியிகள் பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்து வருவதால் தேசிய தேர்வு முகமையின் தலைவரை மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேசிய தேர்வு முகமை தலைவராக இருந்த சுபத் குமார் சிங் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சிங் கரோலா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஏற்கனவே நடைபெற்ற நீட் தேர்வு விவகாரத்தில் ஏராளமான முறைகேடுகள் இருப்பதால் தற்போது நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu