மார்ச் 25ஆம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11,12 வகுப்பு மாணவர்களுக்கு நீட் பயிற்சி கடந்த நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை நடைபெற்று வந்தது. தமிழகத்தில் கடந்த நவம்பர் முதல் பிப்ரவரி வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11,12 வகுப்பு மாணவர்களுக்கு நீட்,ஜே இ இ தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவடைந்த பின்பு கல்வி மாவட்ட அளவில் மார்ச் 25ஆம் […]

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11,12 வகுப்பு மாணவர்களுக்கு நீட் பயிற்சி கடந்த நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை நடைபெற்று வந்தது.

தமிழகத்தில் கடந்த நவம்பர் முதல் பிப்ரவரி வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11,12 வகுப்பு மாணவர்களுக்கு நீட்,ஜே இ இ தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவடைந்த பின்பு கல்வி மாவட்ட அளவில் மார்ச் 25ஆம் தேதி முதல் மே 2ம் தேதி வரை தொடர் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டுதல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு கல்வி மாவட்டத்திற்கு அதிகபட்சம் இரண்டு பயிற்சி மையங்கள் இருக்க வேண்டும் எனவும், ஒரு மையத்திற்கு 40 பேர் வீதம் மாணவர்கள் எண்ணிக்கையை பொறுத்து மையங்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சிகள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 முதல் மாலை 4.30 மணி வரை பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் பல வழிகாட்டுதல்கள் சுற்றறிக்கையில் வெளியிட பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu