அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி இன்று தொடக்கம்

March 25, 2024

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான சிறப்பு பயிற்சி இன்று தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு எழுதுவதற்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து நீட் நுழைவு தேர்வு எழுத விண்ணப்பித்த அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க கல்வித்துறை ஏற்பாடு செய்தது. இந்த பயிற்சி வகுப்புகள் இன்று முதல் மே இரண்டாம் தேதி வரை […]

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான சிறப்பு பயிற்சி இன்று தொடங்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு எழுதுவதற்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து நீட் நுழைவு தேர்வு எழுத விண்ணப்பித்த அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க கல்வித்துறை ஏற்பாடு செய்தது. இந்த பயிற்சி வகுப்புகள் இன்று முதல் மே இரண்டாம் தேதி வரை நடைபெறுகிறது. நீட் தேர்வு வரும் மே மாதம் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 330 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 13,304 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் அரசு பள்ளி சேர்ந்த 850 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 9 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் மாணவர்களுக்கு மூன்று முழுமையான மாதிரி தேர்வுகளையும் எழுத உள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் ஒரு லட்சத்து 56,210 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu