நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேம்பட்ட சட்ட மருத்துவ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விசாரணை நடத்திய சிபிஐ, குற்ற சதியில் ஈடுபட்டல், சாட்சியங்களை அழித்தல், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. விடைத்தாள் கசிவு குறித்த குற்றச்சாட்டுகளுக்கிடையே, நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
40 பேரை கைது செய்து 58 இடங்களில் சோதனை நடத்தியுள்ள சிபிஐ, விசாரணையை தொடர்ந்துள்ளது. தேர்வு முறையின் பாதுகாப்பை அதிகரிக்க செயல்முறை விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.