நாடு முழுவதும் நீட் தேர்வு 13 மொழிகளில் கடந்த மே ஐந்தாம் தேதி நடைபெற்றது.
நாடு முழுவதும் கடந்த மே ஐந்தாம் தேதி 574 நகரங்களில் உள்ள 4750 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் சுமார் 200 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 1.52 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். நீட் தேர்வானது தமிழ், ஆங்கிலம்,ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடிசா, அஸ்ஸாமி, வங்காளம், உருது உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு பெற்று தேர்வு முடிவுகள் நேற்று www.nta.ac.in என்ற இணையதள பக்கத்தில் வெளியாகியது. இதில் 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்து சாதனைப்படைத்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை எட்டு பேர் முழு மதிப்பெண் பெற்று தர வரிசையில் முதலிடம் பிடித்துள்ளனர்