நீட்டா அம்பானி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாளை முதல் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நீட்டா அம்பானி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து நீட்டா அம்பானி கூறுகையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பெருமைப்படுவதாகவும், தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார். இவர் முதன் முதலாக 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் சேர்ந்த முதல் இந்திய பெண் என்ற சாதனையையும் இவர் பெற்றுள்ளார்.