இந்திய ஆன்ட்டிபயாட்டிக் மருந்துக்கு நேபாளத்தில் தடை

June 20, 2024

இந்திய நிறுவனம் தயாரித்த ஆண்டிபயாடிக் மருந்துக்கு நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மருந்தால் ஆபத்தான பக்க விளைவுகள் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டதால் மருந்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சைடஸ் ஹெல்த்கேர் என்ற நிறுவனம் தயாரித்துள்ள பயோடக்ஸ் 1 ஜி எம் என்ற ஆன்டிபயாட்டிக் மருந்து, நுரையீரல், மூளை, காது, சிறுநீரகப் பாதை, தோல் மற்றும் தசைகளில் பாக்டீரியா பாதிப்புகள் ஏற்படும் போது, அதற்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த மருந்தால் உயிருக்கே ஆபத்து விளைவிக்க கூடிய […]

இந்திய நிறுவனம் தயாரித்த ஆண்டிபயாடிக் மருந்துக்கு நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மருந்தால் ஆபத்தான பக்க விளைவுகள் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டதால் மருந்து தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த சைடஸ் ஹெல்த்கேர் என்ற நிறுவனம் தயாரித்துள்ள பயோடக்ஸ் 1 ஜி எம் என்ற ஆன்டிபயாட்டிக் மருந்து, நுரையீரல், மூளை, காது, சிறுநீரகப் பாதை, தோல் மற்றும் தசைகளில் பாக்டீரியா பாதிப்புகள் ஏற்படும் போது, அதற்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த மருந்தால் உயிருக்கே ஆபத்து விளைவிக்க கூடிய அளவுக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக நேபாள மருந்து கட்டுப்பாட்டு துறை மேற்கொண்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நேபாளத்தின் மருந்து கட்டுப்பாட்டுத் துறை பயோடக்ஸ் என்ற மருந்தின் விற்பனை மற்றும் விநியோகத்துக்கு தடை விதித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu